
இந்தியா உலகக்கோப்பையை வென்றது! அப்பாடா இத்தனை வருஷமா இவங்க விளையாடுற ஆட்டத்தை தொடர்ந்து பார்த்தும் ஆதரவா பேசியும் வந்ததற்கும் அர்த்தம் இருப்பதாக தோன்றுகிறது! தோனியின் வைத்திருந்த நம்பிக்கை பொய்க்கவில்லை. கோடிக்கணக்கான இந்திய ரசிகர்களை ஏமாற்றாமல், இறுதி வரை உறுதியாக இருந்து அணியை வழி நடத்தி வெற்றியும் பெறச் செய்துள்ளார். இத்தருணத்தில் பயிற்சியாளர் கிறிஸ்ட்டனையும் மறந்து விட முடியாது. சச்சினுக்கு சமர்பித்துள்ளனர் கோப்பையை, இது அவர் மீது உள்ள மரியாதையையும் ஈர்ப்பையும் வெளிப்படுத்துகிறது. வெற்றியை நாடே கொண்டாடிக்கொண்டிருக்கிறது. நானும் தான். வெற்றி வெற்றி!

