Dennis Ritchie

NEWS
Dennis Ritchie, creator of the C programming language and co-creator of the Unix operating system, has died aged 70 this week.
Here’s the Story URL: Dennis Ritchie, father of Unix and C, dies

The gr8 ‘c’, a language which has its presence almost everywhere, which is being learned by most of programmers in the world. Personally When i was struggling with ‘c’ ptrs, K&R came to rescue. Without knowing the ptrs, you will not able to understand classes or structures. Its where i got impressed. Anyway goodbye ritchie.

here’s the code for u:

#include <stdio.h>

int main()

{

printf(“goodbye, dennis ritchie\n”);

return 0;

}

Steve Jobs: The Show Man

The Tech World mourns. Steve Jobs passed away. Again a disease took away a people’s favorite star!

Steve Jobs, the mastermind behind Apple’s iPhone, iPad, iPod, iMac and iTunes, has died, Apple said. Jobs was 56.
“Steve’s brilliance, passion and energy were the source of countless innovations that enrich and improve all of our lives. The world is immeasurably better because of Steve.”

“The world rarely sees someone who has had the profound impact Steve has had, the effects of which will be felt for many generations to come,” Bill Gates added.

Nobody else in the computer industry, or any other industry for that matter, could put on a show like Steve Jobs.
US President Barack Obama: also paid tribute: “Saddened to learn of the passing of Steve Jobs. Steve was among the greatest of American innovators – brave enough to think differently, bold enough to believe he could change the world, and talented enough to do it…. The world has lost a visionary.”

Mr. Jobs commanded the respect of competitors, loyalty from the engineers he goaded relentlessly, and loathing from almost everyone.

I’m too one of those millions who got inspired by his innovations. Jobs has always remained as show man, no one can fill his place, may his soul rest in peace.

வெற்றி!



இந்தியா உலகக்கோப்பையை வென்றது! அப்பாடா இத்தனை வருஷமா இவங்க விளையாடுற ஆட்டத்தை தொடர்ந்து பார்த்தும் ஆதரவா பேசியும் வந்ததற்கும் அர்த்தம் இருப்பதாக தோன்றுகிறது! தோனியின் வைத்திருந்த நம்பிக்கை பொய்க்கவில்லை. கோடிக்கணக்கான இந்திய ரசிகர்களை ஏமாற்றாமல், இறுதி வரை உறுதியாக இருந்து அணியை வழி நடத்தி வெற்றியும் பெறச் செய்துள்ளார். இத்தருணத்தில் பயிற்சியாளர் கிறிஸ்ட்டனையும் மறந்து விட முடியாது. சச்சினுக்கு சமர்பித்துள்ளனர் கோப்பையை, இது அவர் மீது உள்ள மரியாதையையும் ஈர்ப்பையும் வெளிப்படுத்துகிறது. வெற்றியை நாடே கொண்டாடிக்கொண்டிருக்கிறது. நானும் தான். வெற்றி வெற்றி!

விண்ணைத்தாண்டி வருவாயா?

அன்று

விழிகள் தாண்டி வந்தவளே!

இன்று எனக்காய்

விண்ணைத்தாண்டியும் வருவாயா?

3

tears

காதலை புகட்டியவள்
கண் முடிச் சென்றாலும்
கண்ணீரில் கரை ஒதுங்கிய
கனவுகள் கலைந்து போகாமல்
காலங்கள் கடந்தும்
கரைத்து கொண்டிருக்கிறது என்னை
அவள் புகட்டிய காதலில்……

கொஞ்சும் நிலவுக்கு….(சந்திராயன்-1)

கொஞ்சம் நிலவுக்கு நேரம் வைத்து தூக்கம் கொள்வோம் என்று தான் பாட்டெழுதினார் வைரமுத்து, ஆனால் கொஞ்சும் நிலவுக்கு கொஞ்சமல்ல தங்கள் முழு நேரத்தையும் செலவிட்டு உழைத்து வருகின்றனர் நமது விஞ்ஞானிகள்.

ஆம், நம் நாட்டின் விண்வெளி ஆராய்ச்சியின் மயில்கல்லான சந்திராயன்-1 திட்டத்தின்படி நிலவுக்கு ஆளில்லா விண்களத்தை வரும் அக்டோபர் 22ம் நாளன்று நிலவக்கூடிய வானிலையை பொருத்து ஏவ இந்திய விண்வெளி ஆய்வுக்கழகமான இஸ்ரோ முடிவு செய்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்திலேயே நடத்தப்படவிருந்த இம்முயற்சி, சில தொழில்நுட்ப கோளாறுகளால் ஒத்திவைக்கப்பட்டு இப்போது மீண்டும் ஏவும் தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மிக உயர்ந்த தொழில்நுட்பங்களுடன் 83 மில்லியன் டாலர் செலவில் செயல்படுத்தப்பட்டுள்ள இத்திட்டத்தில் அமெரிக்கா உட்பட 6 நாடுகள் நேரடியாக ஈடுப்பட்டுள்ளன. ஐரோப்பிய விண்வெளி நிறுவனம்(ESA) இத்திட்டத்தில் இனைந்து முக்கிய உபகரணங்களை வழங்குகிறது.
அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு நிலவின் சுற்றுப்பாதையில் 100 கிமி தொலைவிலிருந்து 590 கிலோ எடை கொண்ட இக்களம் தொலையணர்வு தொழில்நுட்பத்தில் மிகத் துல்லியமான படங்களை எடுத்து அனுப்பி வைக்கும். அதன் மூலம் நிலவின் புவியியல் அமைப்பு மற்றும் அங்கு காணப்படும் இராசயன அமைப்பினையும் அதன் கனிம வளங்களையும் ஆராய விஞ்ஞானிகளுக்கு உதவும் நிலவின் மற்றும் அங்குள்ள வானிலை தகவல்களையும் ஆராயும்.

இந்த நிலவுப் பயணத் திட்டத்தை 2003ம் ஆண்டு அறிவித்தது இந்திய அரசு. வரும் 2014ல் நிலவுக்கு
மனிதனை அனுப்பும் திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 1000 கோடி ருபாய் மதிப்பிலான இத்திட்டத்துக்கு இன்னும் ஒப்புதல் பெறப்படவில்லை, ஆனாலும் இதற்கான ஆயத்த பணிகளில் இஸ்ரோ நம்பிக்கையுடன் இப்போதே இறங்கிவிட்டது.

எனினும் இத்திட்டங்கள் பெரும்பாலனவர்களால் வரவேற்கப்படவில்லை என்பதே நிஜம். இன்னும் அடிப்படை வசதிகள் கூட பல கோடி மக்களை சென்றடையாத நாட்டில் இது வெறும் நம் வளங்களையும் பணத்தையும் வீணடிக்கும் செயல் என்றும் விமர்சிக்கப்பட்டு வருகின்றது. மேலும் இந்திய அரசு இதனை அளவு கடந்து நம்பி முதலீடு செய்வது முட்டாள் தனம் என்றும் கூறப்படுகிறது.

பின்னாளில் மற்ற தேசங்கள் முன்னேற்றமடைந்து நிற்கும் போது இந்தியா தாழ்ந்து நின்றால் நாம் அதற்கும் அரசுகளையே குற்றம் சாட்டுவோம். எனவே இப்படி விமர்சனங்களில் நியாயம் இருந்தாலும், வறுமையை காரணம் காட்டி நாம் பிற துறைகளில் பின் தங்கி விடலாகாது என்பதே நிதர்சனம்.

கூகிளுக்கே விளம்பரம்!

கூகிள் விளம்பரங்களை பார்த்திருப்போம், நம்மில் பலர் நமது தளங்களிலேயே இணைத்திருப்போம். ஆனால் அந்த கூகிளுக்கே இப்போது விளம்பரம் வரப்போகின்றது என்பது தான் இப்போது இணைய உலகின் பரபரப்பான பேச்சு.

இத்துறையில் உள்ள பிற நிறுவனங்கள் பல்வேறு முறைகளில் விளம்பரம் செய்ய, அவற்றில்
நம்பிக்கையில்லாத கூகிள் தனது முறைகளில் இருந்து மாறி, தற்போது மரபுவழி விளம்பரம் செய்யவிருக்கிறது. ஆம் விரைவில் நமது தொலைக்காட்சிகளில் அதன் விளம்பரங்களை காணலாம்.

ஒலிம்பிக் சமயத்திலேயே கூகிள் விளம்பரங்களை இறக்க அந்நிறுவன ஊழியர்கள் தயாராக இருந்தபோதும், அதன் தலைவர்கள் லேரியும், செர்கியும் அதற்கு ஒப்புகொள்ளவில்லையாம். அது தங்கள் நிறுவனத்திற்கு ஒத்துவராது என்றே கருதினர்.

இருப்பினும் அந்த நிறுவனத்தினுல்லேயே நடந்த கடும் வாதங்களுக்கு பின் ஒப்பு கொள்ளப்பட்டதாக தெரிகிறது. சமீபத்தில் பிரபல விளம்பர ஏஜென்சிகளுடன் பேச்சு
நடத்தியுள்ளதாக செய்திகள் வருகின்றன. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஜப்பானில், இதற்கான வேலைகளில் இறங்கியுள்ளனர்.

ஏற்கெனவே என்பிசி யுனிவெர்சல் புரொகிராமிங் சானலில் பிறருக்கு விளம்பரங்களை தயாரித்து அளித்து வருவதால் எப்போது வேண்டுமானால் தனக்கான விளம்பரங்களில் இறங்கலாம். மேலும் புதிதாக வரப்போகும் ஜி1 தொலைபேசிகளுக்கும் விளம்பரம் செய்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இவ்வாறு கூகிள் விளம்பர தயாரிப்பில் இறங்கியுள்ளது மற்ற விளம்பர
தயாரிப்பாளர்களுக்கு புகையை கிளப்பியுள்ளது.

மேலே உள்ள படத்துக்கும் வரப்போகும் கூகிள் விளம்பரத்துக்கும் எந்த சம்ம்ந்தமும் இல்லை. சட்டென்று கண்ணில் பட்ட கூகிள் படமிது.

நீ இல்லாமலும்






நீ இல்லாமலும்

நகர்கின்றன நாட்கள்
தொடர்கின்றன பயணங்கள்
பூக்கின்றன பூஞ்சோலைகள்
முற்றம் வருகிறது முழு நிலா
கால் தழுவிச் செல்கின்றன கடல் அலைகள்
வண்ணங்கள் வார்க்கின்றது வானவில்
தேகம் வருடிச் செல்கிறது தென்றல்
விடிகின்றது வானம்
நீ இல்லாமலும் நிகழ்கின்றன யாவும்
ஆம்
ஆச்சரியமில்லை
நீங்காத
உன் நினைவுகள்
என்னோடு நீடிப்பதால்
நீ இல்லாமலும் நிகழ்கின்றன யாவும்